இன்றைய நாள் (22.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : உங்கள்

By manikandan | Published: Jul 22, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்றைய நாளை நீங்கள் பிரகாசமாக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சிகரமாக அமையும். அதிக முயற்சி நல்ல பலனை தரும்.

ரிஷபம் : உங்கள் முயற்சிக்கு நல்ல வரன் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு நல்ல பலன் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று இழந்தது போல உணர்வீர்கள்.

கடகம் : முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டாம். இதனால் சில நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.

சிம்மம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.

கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் தகவல் பரிமாற்றம் மேம்படும். நெருங்கியவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

துலாம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமாக மாற்றலாம். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று சவால்கள் நிறைந்த நாள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முயற்சிகளை முடிவு எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம் : அமைதி நிலவும் நாள். உங்கள் திறமையை நிரூபிக்க இன்று வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும்.

கும்பம் : இன்று விருந்தினர் வருகை புரியும் நாள். அதனால் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

மீனம் : கடினமான முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களை தராமல் போகலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Step2: Place in ads Display sections

unicc