இன்றைய நாள் (20.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : முயற்சியில் வெற்றி கிடைப்பது

By manikandan | Published: May 20, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : முயற்சியில் வெற்றி கிடைப்பது கடினம். உங்களுக்கான சௌகரியங்களை இழக்க நேரிடலாம். கவலை தரும் நாளாக அமையும். இன்று சுமாரான நாள்.

ரிஷபம் : தடைகள் காணப்படும் நாள். முக்கிய முடிகள் இன்று எடுக்க வேண்டாம். இசை கேட்பது மன ஆறுதலை தரும்.

மிதுனம் : இன்று சீரான நாள். அமைதியாக காணப்படுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள்.

கடகம் : இன்றைய நாள் லாபகரமானதாக இருக்கும். புத்துணர்ச்சியுடனும் மனஉறுதியூடனும் இருப்பீர்கள். புது புது முயற்சிகள் லாபம் தரும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. மனபதட்டத்துடன் காணப்படுவீர்கள். இன்று நடப்பதை எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கன்னி : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்காது. அசௌகரியமானசூழல் உருவாகும். பாதுகாப்பற்ற நாள் போல உணர்வீர்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

துலாம் : இன்று உங்களுக்கு சீரான நாளாக இருக்கும். திருப்தி ஏற்படும் நாள். புது புது வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். புதிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மகிழ்ச்சி கிடைக்கும் நாள். தியானம் மேற்கொள்வது சிறந்தது.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். மனதினை இயல்பாக வைத்திருங்கள். 

மகரம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்காது. ஆன்மிகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மனதினை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். பொறுமையுடனும், மனஉறுதியுடனும் இருக்க வேண்டும்.

கும்பம் : இன்று மிக நல்ல நாள். அதிர்ஷ்டம் காணும் நாள்.  முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஆன்மீக பயணங்கள் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக மாற்றும்.  அதன் மூலம் நல்லபலன்கள் கிடைக்கலாம்.

Step2: Place in ads Display sections

unicc