இன்றைய நாள் (04.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்றைய நாள் (04.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். நல்ல திட்டங்கள் நல்ல பலனை தரும்.

ரிஷபம் : இன்று இயலாதோருக்கு தான தர்மங்களை செய்யுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு போராட்டமாக இருக்கும். ஆதலால் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது மன ஆறுதலை தரும்.

கடகம் : இன்றைய நாள் சிறந்ததாக அமையும். நீங்கள் கவனமாக செயல்படவேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை இன்று பயன்படுத்தி கொள்வது நல்லது.

சிம்மம் : இன்றைய நாள் உற்சாகமாக இருக்காது. நல்ல பலன்களை எதிர்பார்க்க வேண்டாம். குழப்பம் உள்ள நாள். இறைவழிபாடு உதவியாக இருக்கும்.

கன்னி : நீங்கள் எதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

துலாம் : இன்றைய நாளில் உங்களுக்கு அனுகூலம் குறைவாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செயலாற்ற வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பாக அமையும். உங்கள் நலனை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். திருப்திகரமான நாள்.

தனுசு : அதிக பொறுப்புகள் உங்களை பதட்டமடைய செய்யும். இறைவனை வழிபடுவதன் மூலம் உங்கள் மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்க முடியும்.

மகரம் : இன்று உங்களுக்கான சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்றநாள். மனதில் குழப்பம் நிலவும். அதனால் இன்று எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தராது.

கும்பம் : உங்கள் கவனத்தை இழக்கும் சூழல் உண்டாகும். ஆதலால் நீங்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.

மீனம் : உங்களது ஆற்றல் மூலம் இன்று வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். உங்கள் செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் மன உறுதி இன்றைய நாளை எளிதாக கடக்க உதவும்.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!