இன்றைய நாள் (03.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு

By manikandan | Published: Jun 03, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு நல்லதாக அமையும். இன்று நல்ல பலன்கள் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கானது. உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள். எடுக்கும் முடிவுகள் திடமாக இருக்கும்.

மிதுனம் : இயலாதோருக்கு உதவி செய்வது உங்களுக்கு மன நிறைவை தரும். இன்றைய நாள் உபயோகமானதாக இருக்கும். உங்கள் இலக்குகள் தாமதமாக நிறைவேறலாம்.

கடகம் : இன்று உங்களுக்கான சௌகரியங்கள் உங்களை விட்டு விலகி செல்லும் நாள். கடினமாக உழைக்க வேண்டிய நாள். தகப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மனஅமைதியை தரும்.

சிம்மம் : உங்களின் நல்ல தகவல் பரிமாற்ற திறனின் மூலமாக இன்று நல்லது நடக்கும். இன்று நம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள்.

கன்னி : பொறுமையாக செயல்பட்டால் இன்றைய சவால்களை எதிர்கொள்ளலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் : இன்றைய நாளில் சவால்கள் நிறைந்து காணப்படும். வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள். சிந்தனைகள் பெரிய அளவில் இருக்கும். 

விருச்சிகம் : இன்று தடைகள் காணப்படும் நாள்.  திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பதட்டத்தை கட்டுப்படுத்தி செயல்களில் ஈடுபடவேண்டும்.

தனுசு : இன்று உயர்ந்த பதவியை அடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிகொணர நம்பிக்கையான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். நீங்கள் மனஉறுதியுடன் காணப்படுவீர்கள்.

மகரம் : நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் நிறைவேறும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கும்பம் : உங்களுக்கு தேவையான பலன்கள் இன்று கிடைக்காது. கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் தகவல் பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்படும். பதட்டத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம் : இன்றைய கடினமான சூழ்நிலைகளை அமைதியாக கடந்து செல்ல வேண்டும். அப்படி செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். சில விஷயங்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

Step2: Place in ads Display sections

unicc