இன்றைய நாள் (01.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ... மேஷம்

By manikandan | Published: Jul 01, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ...

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகம் இருக்கும். நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதனால், உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.

மிதுனம் : இன்று அதிர்ஷ்டம் உள்ள நாள். தடைகளை தாண்டி வெற்றிகளை காண்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம் : இன்று நீங்கள் கடைசி நேரத்தில் வாய்ப்பை இழக்கும் சூழல் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையாது. அது உங்களுக்கு கவலையை தரும்.

சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுவீர்கள். பிரியமானவர்கள் உடன் மோதல் ஏற்படும் நாள். அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

துலாம் : உணர்ச்சிவசப்படுதல் காரணமாக உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கலாம். இன்று நீங்கள் சாதுரியமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம் : இன்று நீங்கள் செய்ய போகும் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் சுய முயற்சியை நம்புங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். மனம் அமைதியாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

மீனம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். அதுகுறித்து கவலை உண்டாகும். எந்த செயலை செய்வதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும்.

Step2: Place in ads Display sections

unicc