இன்று உலக புலிகள் தினம்…!

இன்று உலக புலிகள் தினம்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் உலக புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புலிகளின் அழிவுக்கு வேட்டையாடுதல், வாழ்விடம் ஆக்கிரமிக்கப்படும் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடாமல், புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. புலிகள் வளத்தின் சூழல் தன்மையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமான புலிகள் வாழுகின்றன. இந்தியாவில் 50 இடங்களில் புலிகள் சரணாலயம் காணப்படுகிறது. தமிழகத்தில் முதுமலை, களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் காணப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.