இன்று உலக மக்கள் தொகை நாள்…!

இன்று உலக மக்கள் தொகை நாள்…!

ஒவ்வொரு வருடமும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  1987-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலக மக்கள் தொகை 5 பில்லியனை தாண்டியது.

மக்கள் தொகை அதிகரிப்பு

மக்கள் தொகை அதிகரிப்பு கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் உலக மக்கள்தொகை வளர்ச்சியானது விரைவாக அதிகரிக்க தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. இருப்பினும், 1960 இல் 300 கோடி மக்கள் தொகையை 33 ஆண்டுகளிலேயே எட்டியது. 1999ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்ததாக குடித்தொகை மதிப்பீட்டு பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக கூறப்படுகிறது. மேலும், இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube