இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள்..!

இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள்..!

இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள்.

இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கையில் கொடியுடன் குமரன் பேரணியாகச் சென்றார்.
அப்போது காவல் துறையினர் நடத்திய தடியடியில் குமரனின் மண்டை பிளந்தது. எனினும் கையில் இருந்த கொடியை கீழே விடாமல் ஏந்தியவாறு மயங்கிக் கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரன் அங்கு உயிரிழந்தார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

Join our channel google news Youtube