நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் ஒருநாள் போட்டி! வெற்றி யாருக்கு.. ?

ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள், துபாயில் இருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அங்கு கடந்த சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி ஒருநாள் போட்டி, நாளை தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய ஜெர்சியில் விளையாட உள்ளது. இந்த ஜெர்சி இந்திய அணி கடந்த 1992-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய போட்டியில் அணிந்திருந்த ஜெர்சி போன்று இருக்கிறது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் காயம் காரணமாக களமிறங்கவில்லை.

ஒருநாள் போட்டி அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் ), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா,  சாஹல், குல்தீப் யாதவ்,  பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்,சஞ்சு சாம்சன்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.