இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக ஆட்சி.!

அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அரசின் சாதனைகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம்‌ இதயத்தில்‌ என்றும்‌ வாழும்‌ பாசமிகு தாய்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ தொடர்‌ வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின்‌, நான்காம்‌ ஆண்டு நிறைவுற்று இன்று ஐந்தாம்‌ ஆண்டு தொடங்குகிறது.

கழக நிறுவனத்‌ தலைவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ நிகழ்த்திய சாதனையைப்‌ போல, தொடர்ந்து ஆட்சியில்‌ நீடிக்கும்‌ அரசாக, 2016-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற தமிழ்‌நாடு சட்டமன்றப் பொதுத்‌ தேர்தலில்‌ தன்னந்தனியாக களம்‌ கண்டு, தொடர்‌ வெற்றி மூலம்‌ மீண்டும்‌ கழக அரசை அமைத்த மகத்தான சாதனையாளர்‌ நம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி ஜெயலலிதா‌ என்று கூறியுள்ளனர்.

தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. அதிமுக அரசே தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நேற்றும் இன்றும் நாளையும், அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றரைக்‌ கோடி கழக உறுப்பினர்களின்‌ ஒத்துழைப்பாலும்‌, தமிழ்‌ நாட்டு மக்களின்‌ பேராதரவாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தையும்‌, கழக அரசையும்‌ மாண்புமிகு அம்மா அவர்களின்‌ பூரண நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம்‌. மாண்புமிகு அம்மா அவர்களின்‌ வழியில்‌ நாம்‌ செயல்படுகிறோம்‌ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்