இன்று எழுத்தாளர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்…!

எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12, 1975 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தனது 4 வயதில் தாயை இழந்த இவர் சிறு வயது முதற்கொண்டே புத்தகத்தின் மீது அளவில்லாத பற்று கொண்டவராக வாழ்ந்தார்.

தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியில் ஈடுபட்டார். பின் இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் பாடினார். இவர் கிரீடம், வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்களில் பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை மிகச்சிறந்த பாடல்கள் ஆகும்.  2016-ஆம் ஆண்டு வரை தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருந்த இவர் பட்டாம்பூச்சி பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்.

இந்நிலையில், 2006-ஆம் ஆண்டு வடபழனியில் உள்ள தீபலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ஆதவன் என்ற மகனும், யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார். பின், ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, தனது 41-வது வயதில் காலமானார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.