தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் இன்று…!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் இன்று…!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டங்கோட்டை எனும் ஊரில் பிறந்தவர் தான் தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் டி எஸ் பாலையா. இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் துறையில் தலைசிறந்த நடிகராக விளக்கியுள்ளார். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் அதிகளவில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

பின் இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகியவை பெரும் புகழ் பெற்ற இவரது நகைச்சுவை படங்களாகவும் உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகையே தனது நடிப்புத் திறமையால் ஆச்சரியத்தில் ஆழ்த்திய டி எஸ் பாலையா 1972ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube