இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று…!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஒஹையோ என்னும் பகுதியில் பிறந்தவர் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றிய இவர், இரண்டு ஆண்டுகளில் கடற்படை விமானி ஆகியுள்ளார்.

sunitha

அதன் பின்பு, 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கு பகவத்கீதை, விநாயகர் சிலை மற்றும் கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார். இது தற்பொழுது வரை பேசப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் எனும் சாதனையையும் இவர் படைத்துள்ளார். ஆனால் இந்த சாதனையை அதன் பின் காத்ரின் எனும் பெண் முறியடித்துள்ளார். இவர் நாசா விண்வெளி வீரர் அலுவலகத்தின் துணை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு நேவி கமென்டேஷன் விருது, நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது, மனிதாபிமான சேவை விருது மற்றும் பல்வேறு பிற சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவர் விண்வெளி நிலையத்தில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வளர வாழ்த்துக்கள். இன்று இவரது 56 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal