நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் இன்று…!

நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று.

நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்த விண்வெளி வீரர் எனும் பெருமைக்குரியவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் வாபகெனெட்டா எனும் நகரில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே இவர் தனது தந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுதே இவருக்கு விமானம் ஓட்டும் ஆசை வந்துள்ளது. எனவே தனது 16-வது வயதிலேயே விமானம் ஓட்டும் உரிமத்தையும் பெற்றுள்ளார்.

அதன் பின்பு 1962  ஆம் ஆண்டு நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்து அங்கும் டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். 1969 ஆம் ஆண்டு மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வார்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் இணைந்து நிலவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பல்லோ 11 விண்கலத்தில் குழு தலைவராக விண்வெளி சென்ற இவர், 1969 ஜூலை 20 ஆம் தேதி நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இவருக்கு 17 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான பல்கலைக்கழகங்களில் இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கௌரவ பதக்கங்கள், சிறந்த பணிக்கான நாசா விருது ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று இவருக்கு இருதயத்தில் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்குப் பின் இவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் மருத்துவமனையில் இருக்கும்போதே அவரது உடல் நலத்தில் திடீரென சிக்கல் உருவாகியது. இதனையடுத்து ஆகஸ்ட் 25, 2012 ஆம் ஆண்டு சின்சினாட்டி, ஓஹியோவில் இவர் மரணமடைந்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டு சிறந்த விண்வெளி வீரராக திகழ்ந்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் உயிரிழந்துள்ளார்.

Rebekal

Recent Posts

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

25 mins ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

1 hour ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

2 hours ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

2 hours ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

2 hours ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

3 hours ago