கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று…!

கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று.

ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாமி மற்றும் குமாரசாமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர். ஆறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர், அதன் பின்பதாக தனது தாயுடன் வளர்ந்து வந்துள்ளார். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி, கருப்பு வைரம் என்றெல்லாம் இவர் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் படித்துள்ளார்.

அதன் பின்பாக அரசியல் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் அதிகரித்ததன் காரணமாக தனது 16 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அரசியலில் அதிக அளவு ஈடுபட்டு வந்த காமராஜர், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

ஒருமுறை இவர் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் பள்ளிக்கு செல்லவில்லையா என கேட்டதற்கு, சாப்பாடு தருவீர்களா என்று சிறுவன் கேட்ட ஒரு கேள்வியால் போட்ட சட்டம் தான் இலவச மதிய உணவுத் திட்டம். இவர் வாழ்நாள் முழுவதும் தனது குடும்பத்திற்காக வாழாமல் மக்கள் பணி செய்து வந்துள்ளார். அதன் பின் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாள் 1975 இல் இவர் இயற்கை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு பின்பதாக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

Rebekal

Recent Posts

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

14 mins ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

2 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

2 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

2 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

3 hours ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

3 hours ago