11.3 C
London
Saturday, October 16, 2021

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று…!

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தவர் தான் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 1980 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த இவர் SLV-III  எனும் ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி-1 எனும் துணை கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றியவர்.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு பதவியேற்று, இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியவர் அப்துல் கலாம். இவர் பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட அப்துல் கலாம் பொறியியல் டாக்டர் பட்டம், ஹூவர் மெடல், அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் ஜூலை 27ஆம் தேதி 2015 இல் மேகாலயா மாநிலத் தலைநகரமான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றும் பொழுது மயங்கி விழுந்தார். பின்பதாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்துல் கலாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜூலை மாதம் 30 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு பின்பதாக இவரது நினைவை போற்றும் விதமாக பீகார் மாநிலத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நகருக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15-ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More