30 C
Chennai
Thursday, October 21, 2021

விடுதலைப் போராட்ட வீரர் லாலா ஹர்தயால் பிறந்த தினம் இன்று …!

விடுதலைப் போராட்ட வீரரும், படைப்பாளியுமான லாலா ஹர்தயால்  பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1884 ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி டெல்லியில் உள்ள சீராகானா எனும் பகுதியில் பிறந்தவர் தான் லாலா ஹர்தயால். இவர் சிறந்த படைப்பாளியும் விடுதலை போராட்ட வீரருமாக திகழ்ந்துள்ளார். 1910ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்குள்ள சிலருடன் இணைந்து கதர் எனும் பத்திரிகையை வெளியிட்டு உள்ளார்.

அதன் பின்பு 1913 ஆம் ஆண்டு அமெரிக்க பசுபிக் பிராந்திய கழகம் என்னும் கட்சியை இவர் சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார். அதன் பின்பு இந்தியாவில் ஆங்கில அரசு செய்து வந்த கொடுமைகளை பத்திரிக்கை மூலமாக உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின் உலகின் கவனம் இந்தியா பக்கமாக திரும்பியுள்ளது.

இவர் கதர் என்னும் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு உள்ளார். ஆயுதப்புரட்சிக்கான பல முனைப்புகளை மேற்கொண்ட இவர், பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளார். இவர் 1939ஆம் ஆண்டு தனது 54 வது வயதில் மறைந்துள்ளார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More