வரலாற்றில் இன்று : டிசம்பர்-2! மாவீரன் நெப்போலியன், இந்தியாவின் விடுதலை இன்னும் சில…

ஐரோப்பில் பிறந்த ஒரு இளம் வீரன், வளர்ந்து பிரெஞ்ச் புரட்சி மூலம் பிரென்ச் அரசை கைப்பற்றி இதேநாளில் 1804 ஆம் ஆண்டு பிரென்ச் குடியரசின் மன்னனாக முடிசூட்டி கொள்கிறான் அந்த வீரன். ஐரோப்பாவையே கதிகலங்க வைத்த அந்த வீரன் பெயர் நெப்போலியன்.1812இல் ரஷ்யா அவரது ஆட்சிக்கு முடிவு கட்டியது. 1814இல் பிரெஞ்சில் இருந்து நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். மீண்டும் ஓராண்டுக்குள் தனது அரசை கைப்பற்றி மீண்டும் போர், அதன் பின்னர் வாட்டர்லூ எனுமிடத்தில் தோல்வி.  அதன் பின்னர் செயின்ட் ஹெலனா தீவில் சிறை. அங்கேயே முடிவுற்றது மாமன்னர் நெப்போலியன் வாழ்வு.

இந்தியாவை விட்டு தனது ஆதிக்கத்தை விலக்கி கொல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு, 1946இல் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு, பலதேல் சிங், முஸ்லீம் லீக் தலைவர்கள் முகமது ஜின்னா ஆகோயோரிடம் இந்தியாவின் சட்டசபையையை பிரதிநித்துவப்படுத்த அழைத்த நாள் டிசம்பர் 2

1933ஆம் ஆண்டு தற்போதைய திராவிட கழக தலைவர் கீ.வீரமணி அவர்கள் பிறந்த தினம் இன்று.

1960ஆம் ஆண்டு தமிழ் நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திராவில் எலிராவில் பிறந்தார்.

1963ஆம் ஆண்டு இதேநாளில் நடிகரும் முன்னாள் அரசியல் பிரமுகருமான நெப்போலியன் பிறந்தார். இவர் முன்னாள் மத்திய சமூக நிதி இணையமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.