இன்றைய (13.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இன்று கட்டுப்படுத்த வேண்டும். இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம் வெற்றி காணலாம்.

ரிஷபம்: இன்று சிறப்பான நாள் அல்ல. விரும்பும் பலன் கிடைக்கும் சூழ்நிலை காணப்படாது. விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம். பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் இலக்குகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.

கடகம் : நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் வேகம் காட்டக் கூடாது. திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.

சிம்மம்: இன்று மிதமான பலன்களே கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும் சூழ்நிலை ஏற்படலாம். மனக் குழப்பங்கள் காணப்படும்.நல்ல பலன்களைக் காண திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

கன்னி: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைகாது. தீய விளைவுகளை தடுப்பதற்கு நீங்கள் ஆழ்ந்து யோசித்து எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசினால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.

துலாம்: உங்கள் முயற்சிகளில்விரும்பத்தக்க பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும். உங்களின் நம்பிக்கை உணர்வு உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை கொள்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நல்ல பலன் தரும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

தனுசு: இன்று எதிர்பாராத நிச்சயமற்ற நிலைமை காணப்படும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்றைய சவால்களை சமாளிக்க பொறுமை அவசியம்.எனவே சிறப்பாக பணியாற்ற கவனம் தேவை.

மகரம்: இன்று அதிகமாக சிந்தனை வயப்படும் நிலை காணப்படும். எதையும் எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வது நல்லது. பணி நிமித்தமான பயணம் சாத்தியம்.

கும்பம்: இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். அடிக்கடி பயணம் ஏற்படும். அதனால் பலன் உண்டாகும்.உங்கள் பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்: இன்று சுறுசுறுப்பான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.உங்கள் முயற்சிகளில் வெற்றி எளிதில் கிடைக்கும். எனவே உற்சாகமாக காணப்படுவீர்கள். சகபணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.