டிஎன்பிஎஸ்சி-யை இரண்டாகப் பிரித்து புதிய தேர்வாணையம்… ராமதாஸ் கண்டனம்.!

டிஎன்பிஎஸ்சி-யை பிரித்து புதிதாக மற்றொரு தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்திற்கு ராமதாஸ் கண்டனம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி மூலம், தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வுகள் வைத்து தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், புதிதாக மற்றொரு தேர்வு வாரியம் தேவையில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)-ஐ இரண்டாகப் பிரித்து சார்புநிலைப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய புதிதாக இன்னொரு தேர்வாணையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசுப்பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச்செய்யும் இந்த ஆலோசனை குறித்து தான் அதிர்ச்சியடைந்ததாக ராமதாஸ் மேலும் கூறினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிக்கலின்றி செயல்பட்டு வரும் நிலையில் புதிய தேர்வு வாரியம் அமைப்பது குறித்து அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் வரும் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் செயலுக்கு வந்தால் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு 500க்கும் குறைவான பணிகள் மட்டுமே நிரப்பப்படும் எனவே, அரசு இந்த திட்டத்தினைக் கைவிடவேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar