வதந்திகளை நம்ப வேண்டாம்… திட்டமிட்டபடி தேர்வு நடக்கும்…. தேர்வுக்கு தயாராக டி.என்.பி.எஸ்.சி….

இந்த 2020அம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சில தினங்களுக்கு முன் தமிழக அரசு  ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 58லிருந்து  59 ஆக அதிகரிக்கப்பட்டது.  இந்த உத்தரவால், புதிய வேலைவாய்ப்புகள் குறையும் என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அரசு பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனவும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது எனவும் வதந்திகள் பரவின. இந்நிலையில், இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், நடப்பாண்டில், அரசு பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, போட்டி தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட, 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி, ‘குரூப் – 1 முதல், குரூப் – 4’ வரை அனைத்து தேர்வுகளும், உரிய காலத்தில் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டை பொறுத்தவரை, அரசு துறைகளின் தேவைக்கு ஏற்ப, காலியிடங்களை நிரப்ப, தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  தேர்வர்கள், எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

author avatar
Kaliraj