#Breaking: டிஎன்பிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு- தமிழக கிரிக்கெட் சங்கம்!

#Breaking: டிஎன்பிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு- தமிழக கிரிக்கெட் சங்கம்!

ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரை போல, தமிழக மாவட்டத்திற்கிடையே நடைபெறும் தொடர், டிஎன்பிஎல் போட்டிகள். இந்த போட்டிகளில் நன்றாக விளையாடும் நபர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டு.  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 5 ஆம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார். மேலும், டிஎன்பிஎல் போட்டிகளுக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

Join our channel google news Youtube