7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக அஜிதேஷ் குருசுவாமி 112 ரன்களும், நெரஞ்சன் 25 ரன்களும், சோனு யாதவ் 20 ரன்களும் குவித்துள்ளனர்.