7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் திருச்சி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 118 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது.