ஆட்டத்தை தொடங்கிய அக்னி நட்சத்திரம்... பல இடங்களில் சதமடித்து சாதனை ....

அக்னி நட்சத்திரம் தனது உக்கிரத்தை தற்போது காட்டத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில்

By kaliraj | Published: May 18, 2020 08:47 PM

அக்னி நட்சத்திரம் தனது உக்கிரத்தை தற்போது காட்டத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற மே 31ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் வெயிலின் அளவு  100 டிகிரியை தாண்டியுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று

  • திருச்சி 105.98,
  • கரூர் பரமத்தி 104.9,
  • மதுரை விமான நிலையம் 104.36,
  • நாமக்கல் மற்றும் சேலம் 104,
  • மதுரை 101.48,
  • திருத்தணி அதிராம்பட்டினம் 101.12,
  • தருமபுரி 100.76 ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc