முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச்செயலகம் – நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!

தலைமைச்செயலகத்தை முற்றிலும் கணினி மயமாக்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல் முறையாக,கடந்த ஆக.13ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும்.காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e – Office ) ஆக மாற்றுவதற்கு ரூ.13 கோடி நிதியை ஒதுக்கி தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு துறைகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வாரியங்கள் / ஏஜென்சிகளில் இ-அலுவலகத்தை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அதன்படி,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, டிஎன்இஜிஏ உள்ளிட்டவை ரூ .21,46,24,904 மதிப்பீட்டில் அனைத்து செயலகத் துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்த அரசுக்கு விரிவான முன்மொழிவை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, TNEGA இன் முன்மொழிவை அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு,நிர்வாக ஒப்புதல் மற்றும்  ரூ. 13,44,27,90 நிதி ஒதுக்கி செயலகத்தின் அனைத்து துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…

18 mins ago

மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…

18 mins ago

தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…

21 mins ago

வாக்குப்பெட்டியை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்… சுவாரஸ்ய தகவல்கள்…

Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…

31 mins ago

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

1 hour ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

1 hour ago