2020 ஆம் ஆண்டின் FICCI விளையாட்டு விருதினை வாங்கவுள்ள தமிழக வீராங்கனை மற்றும் மல்யுத்த வீரர்!

தமிழகத்தை சேர்ந்த இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI விளையாட்டு விருது வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மட்டுமின்றி, பல அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில், 2019-2020 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (FICCI) சார்பில் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் தமிழகம், கடலூரை சேர்ந்த துப்பாக்கிசூடு இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு வழங்கவுள்ளது. மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, 2021-ல் நடக்கவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.