தமிழக முதல்வர் வழங்கிய சிறப்பு விருதுகளின் தொகுப்பு! திருநெல்வேலி வீர தம்பதிக்கும் சிறப்பு விருது!

இன்று இந்தியா முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

பின்னர், ஒவ்வோர் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சியாக முதலிடத்தில் தருமபுரியும், இரண்டாவதாக வேதாரண்யம் நகராட்சியும், மூன்றாவதாக அறந்தாங்கி நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக, சிறந்த பேரூராட்சியில் முதலிடதிற்க்கான விருது மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டிக்கும், இரண்டாவதாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கும்,  மூன்றாவது இடத்தினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேரூராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த நல் ஆளுமைக்கான விருது தமிழக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கும், அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த துணிவு சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மாநில இளைஞர்களுக்கான விருது ஆண்கள் பிரிவில், நவீன் குமார் ( நாமக்கல்), ஆனந்த் குமார் ( திண்டுக்கல்), ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் கலைவாணி மதுரையை சேர்ந்த பெண்ணிற்கும்  வழங்கப்பட்டது.

திருடர்களை விரட்டி அடித்த திருநெல்வேலியை சேர்ந்த வீரத்தம்பதி சண்முகவேலு மற்றும் செந்தாமரை ஆகியோருக்கு அதிவீரதீர செயல்கள் புரிந்ததாக துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.