#விண்ணப்பியுங்கள்-அரசு..பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச வகுப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வு எனப்படும் நீட் தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள 2017ம் ஆண்டு முதல் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டிற்கான பயிற்சியானது நவ.,1ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் இ-பாஸ் முலம் கோவை தனியார் நிறுவனம் சார்பில் இப்பயிற்சியினை அரசு வழங்கி வருகிறது குறிப்பிடத்தகக்து.

இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் விவரத்தை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது

author avatar
kavitha