34.4 C
Chennai
Friday, June 2, 2023

திருவண்ணாமலை – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கண்ணமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், செங்கம் காவல் நிலைய காவலர் சோலை, தானிப்பாடி காவல் நிலைய காவலர்கள் பாபு, உர்ஜின் நிர்மல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.