திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண்ணும், காட்டுமன்னார்குடியை சேர்ந்த 25 வயதான நரேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு, இன்று காலை சத்யஸ்ரீயை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற நரேந்திரன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த நரேந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு நரேந்திரனும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். பின் மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளனர். ஆனால், சத்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.