'வெல்டன் திருப்பூர் கலெக்டர்'- ட்வீட் செய்த நிதியமைச்சர்!அசத்தல் தடுப்பு பணி-பாராட்டு

'வெல்டன் திருப்பூர் கலெக்டர்'- ட்வீட் செய்த நிதியமைச்சர்!அசத்தல் தடுப்பு பணி-பாராட்டு

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஆனால் மக்கள் தங்கள் அத்தியவாசிய தேவைக்காக வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில்  ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூடிகின்றன.

எனவே மக்களின் பாதுகாப்பு அவசியத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் இது குறித்து தொழில் துறையினர் ஆலோசனையுடன், தன்னார்வலர்கள் பங்களிப்போடு  கிருமி நாசனி தெளிக்கும் நடைபாதை தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக சென்று, முழு பாதுகாப்போடு அங்கு காய்கறிகளை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ‘வெல்டன் திருப்பூர் கலெக்டர்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி தனது பாராட்டை தெரிவித்து உள்ளார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube