சூரிய, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்கள் மூடப்படும்..

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் 60 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மூடப்படும்.

அக்டோபர் 25 ஆம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் மூடப்படும்.

நவம்பர் 8 ஆம் தேதி மதியம் 2.39 மணி முதல் மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி கோவிலில் அனைத்து விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், இரண்டு நாட்களிலும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படும்.

Leave a Comment