திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு.! லட்டு விலையில் மாற்றம்.!

ஊரடங்கு காரணமாக ரூ. 50  லட்டை ரூ. 25-க்கு  விற்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதி கோவில் மூடப்பட்டது. கோவில் மூடப்பட்டதால், பல கோடி ரூபாய் வருவாய் தேவஸ்தானம் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில், ஏழுமலையான்
தரிசனம் கிடைக்காத நிலையில், பிரசாதத்தை கொடுங்கள் என பல பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், ரூ. 50  லட்டை ரூ. 25-க்கு  விற்கப்படும். ஊரடங்கு முடியும் வரை இந்த விலை அமலில் இருக்கும். லட்டு ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட மாநில நகரங்களிலும் கிடைக்கும்.

முன்பு மாதிரி இல்லாமல் ஒருவர் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் லட்டு விற்பனை வர தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk