திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு:இன்று  தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

  • காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
  • வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.மீதிவுள்ள 3 தொகுதிகளில்  வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன்.தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில்  வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு.அதேபோல்  திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று  தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.வழக்கை திரும்பப் பெறுவதாக சரவணன் ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று  தீர்ப்பு அளிக்கப்படுகிறது. 

Leave a Comment