31 C
Chennai
Monday, October 25, 2021

திருநெல்வேலி : சாவி தொலைந்ததால் வாக்கு பெட்டியின் பூட்டு உடைப்பு …!

திருநெல்வேலி அம்பாசமுத்திர தொகுதியிலுள்ள தபால் வாக்கு பெட்டியின் சாவி தொலைந்ததால் பூட்டு சுத்தியலால் உடைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. எழுபத்தி நான்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்கு எண்ணும்  அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்துள்ளது. இதனால் இந்த வாக்கு பெட்டி சுத்தியல் மூலமாக உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More