திருச்செந்தூர் தைப்பூச திருவிழா..அழகனை காண படையெடுக்கும் பக்தர்கள்.!

  • மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரம் ஆனாலும் பழமுதிர் சோலை மரமாவேன் முருகா…என்ற பாடலுக்கு ஏற்ப அற்புத ஆன்மீக இடமாகத் திகலும் திருச்செந்தூர்.
  • தைப்பூசத் திருவிழாவானது வரும் 8ந்தேதி கோலகலமாக துவங்குகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகின்ற 8ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான இந்த தலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 8ம் தேதி தைப்பூச திருவிழாவானது சிறப்பாக நடைபெறுகிறது.

இதனால் அய்யனை தரிசிக்க பக்தர்கள் ஏராளமானோர், பாதயாத்திரையாகவே வருகை தருகின்றனர்.அவ்வாறு நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ரோடுகளில் பச்சை வேட்டி அணிந்த பக்தர்களின் அரோகரா..கோஷத்தை செல்வதை காண முடிகிறது. சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாகவே அந்த அழகனை கண்டு களிக்க கால் நடையாகவே வருகின்றனர்.

இந்நிலையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் முருகனுக்கு உரிய நட்சத்திர நாளான வரும் 8 ந்தேதி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு எல்லாம் சுவாமி சன்னிதியின் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம், 6 மணிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் 6.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடுகின்ற நிகழ்ச்சியும் இதைத்தொடர்ந்து சுவாமிக்கு பல பூஜைகளும் நடக்கிறது. மேலும் உச்சிகால பூஜைக்குப்பின் சுவாமி அலைவாயுகந்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வருகிறார்.

அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகமானது நடக்கிறது. சரியாக இரவு 7 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி 4 ரதவீதி மற்றும் உள்மாட வீதியை சுற்றி இரவு கோயிலை வந்தடைகிறார். இதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தைப்பூச திருவிழாவிற்காக சிறப்பு  ஏற்பாடுகளை எல்லாம் கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

author avatar
kavitha