காலையில தினமும் சப்பாத்தி, இட்லி சாப்பிட்டு அலுத்துட்டா….? இன்று இதை ட்ரை பண்ணி பாருங்கள்!

பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பாஸ்தா
  • தக்காளி
  • வெங்காயம்
  • கடுகு
  • பூண்டு
  • கருவேப்பில்லை
  • மிளகாய் தூள்
  • மல்லி தூள்
  • முட்டை
  • கொத்தமல்லி
  • மிளகு தூள்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாஸ்தாவை அதனுள் போட்டு வேக வைத்து, வடித்து எடுத்து கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றினால் பாஸ்தா கடாயில் ஒட்டாது. அதன் பின் முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி லேசாக உப்பு சேர்த்து, மிளகு தூள் சேர்த்து முட்டையை கிளறி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி அதிகளவில் சேர்க்கலாம். ஏனென்றால், அது தான் இந்த உணவுக்கு ருசியை கொடுக்கும். தக்காளி வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

பின், மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் தேவையான அளவு சேர்க்கவும். அதன் பின்பு வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் இதனுடன் ஏற்கனவே கிளறி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும். பின் சிறிது கொத்த மல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான பாஸ்தா வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal