11.3 C
London
Tuesday, November 30, 2021

மலையேறிப்போன மல்டிஹீரோக்களின் காலம்! இணையும் பிரபலங்கள்!

ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் மற்றொரு ஹீரோ நடிப்பது முன்பெல்லாம் சாத்தியமே கிடையாது என்பது நாம் யாவரும் அறிந்ததே. அண்மையில்கூட 2.0 படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கமல்ஹாசனை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் இணைந்து நடித்தனர். பிறகு கோலிவுட்டில் மாற்றம் ஏற்பட்டது. ரஜினி நடித்த பேட்ட படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, சசிகுமார் இணைந்து நடித்தனர். விரைவில் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், அமிதாப்பச்சன், ஜெயம்ய ரவி, கார்த்தி இணைய உள்ளனர். அந்த வரிசையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் 3 பிரபல நடிகர்கள் இணைகின்றனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More