லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு அவகாசம்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணியின் சகோதரர் உள்ளிட்டோருக்கு அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்.
விசாரணைக்கு ஆஜராக எஸ்பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோருக்கு கடந்த மாதம் 23ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று, எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பு உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது லஞ்சம் ஒழிப்புத்துறை. ஏப்ரல் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு மாதம் அவகாசம் கோரி வேலுமணி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவகாசம் கோரி வேலுமணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேலுமணி உள்ளிட்டோருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.