லாக் செய்யப்பட்ட டிக்டாக்!கதறல் அறிக்கை வெளியீடு

பயனாளர்களின் தகவல்களை எந்த வெளிநாட்டு அரசுக்கும் பகிர்ந்ததில்லை என்று தடைசெய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மத்திய அரசிற்கு அறிக்கை  வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் அரசு தடைவிதிக்க உள்ளது என்ற ஒரு தகவல் பரவி வந்தது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவல் :இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கின்ற வகையில்சீன ஆப்களுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் பரிந்துரைத்தாக தகவல் தெரிவித்ததாகவும்  இது தொடர்பாக பலகட்ட ஆலோசனைகளை  நடந்திய மத்திய அரசு சீனாவின் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து  நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி, ‘டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ மற்றும்  ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்’  போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Image

இந்நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட ஆப்களில் ஒன்றாகிய டிக்டாக் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டப் பட்டுள்ளது.அந்த அறிக்கையில் பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் நாங்கள் பகிர்ந்ததில்லை என்று இந்திய அரசிற்கு அறிக்கையில் கதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha