இழுத்து மூடப்போகும் நிலையில் டிக்டாக் - 4.5 லிருந்து 1.3 ஆக குறைவு.!

பிளே ஸ்டோரில் டிக் டாக் செயலியின் ரேட்டிங் ஆரம்பத்தில் 4.5 ஸ்டார் ரேட்டிங்

By balakaliyamoorthy | Published: May 20, 2020 02:47 PM

பிளே ஸ்டோரில் டிக் டாக் செயலியின் ரேட்டிங் ஆரம்பத்தில் 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்று இருந்த நிலையில், தற்போது 1.3 ஆக குறைந்துள்ளது. 

உலக முழுவதும் பலகோடி பார்வையாளர்களின் விருப்பத்தை பெற்று அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் ஆக டிக்டாக் செயலி இருந்து வந்தது. இதன் முக்கிய அம்சமே தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் வசனங்கள், பாடல்கள் போன்றவற்றை ரசிகர்களே செய்து பார்க்கும் அளவுக்கு கொண்டுவரப்பட்டது தான். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தவும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் ஒரு முக்கிய செயலியாக அமைந்தது.

ஆனால், சமீபகாலமாக டிக் டாக் செயலியில் பாலியல் சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் அதிகம் பதிவிடப்படுகிறது. இதன்மூலம் பல பெண்கள் சில ஆண்களுக்கு அடிமையாகி அதன் மூலமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளும் அதிகம் டிக் டாக் செயலியை விரும்பி பயன்படுத்தி வருவதால் இதுபோன்ற பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வீடியோக்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் பல புகார்கள் எழுந்து வழக்கு பதிவும் போடப்பட்டுள்ளது. பொழுதுபோக்குக்காக பயன்படுத்தி வந்த நிலையில், ஆபாசங்கள் அதிகரித்ததால் இந்த செயலியை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், பிளே ஸ்டோர் என்ற பதிவிறக்க செயலியில் இந்த டிக் டாக் இன் ரேட்டிங் மிக குறைவாக உள்ளது. ஆரம்பத்தில் 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்று இருந்த இந்த செயலி தற்போது 1.3 ஆக குறைந்துள்ளது. இதனிடையே நேற்று ஃபைஸல் சித்திக் என்பவர் இந்தியாவில் டிக் டாக்கில் மிகப் பிரபலம். இவரை டிக் டாக்கில் 1.34 கோடி பயனர்கள் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படி சிதைந்துள்ளது என்பதையும் காட்டியிருந்தார். இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுகையில், நீ யாருக்காக என்னை விட்டுச் சென்றாயோ, அவன் உன்னை விட்டுச் சென்றுவிட்டானா? என்று ஃபைஸல் சித்திக் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை ஊக்குவிக்கும் டிக் டாக் செயலியைத் தடை செய்யவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட ஃபைஸல் சித்திக்கின் கணக்கை டிக் டாக் நிறுவனம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்று செயலுக்கு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections
  • TAGS

unicc