டிக் டாக் நிரந்தர தடை…! ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் …!

டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது. 

இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இதுகுறித்து, இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், கடந்த ஆண்டு இறுதிவரை 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது.

இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவற்றை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து சீன நிறுவனங்கள் அளித்துள்ள  பதில்கள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் டிக் டாக் செயலி மீண்டும் எப்போது செயல்படும் என்று நிச்சயிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தியில், டிக்டாக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது என்பது குறித்து கூற இயலாத சூழல் உள்ளது. இந்தியாவில் எங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தவிர வேறு வழியில்லை. பிசினஸ் நடைபெறாத சூழலிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக ஆதரவளித்தோம்.

ஆனால் இந்தியாவில் மில்லியன் கணக்கிலான பயனர்களுக்கும், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், கதை சொல்பவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீண்டும் எங்களது இயக்கத்தை தொடங்குவதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவசிய தேவையில்   உள்ளவர்களை மட்டும் வேலையில் தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர் என  இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

16 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

26 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

43 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

59 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

1 hour ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

2 hours ago