அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்..!

வசந்தபாலன் மற்றும்  அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை  துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும்,படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்கள்.

அதனை தொடர்ந்து இந்த படத்தில் தற்போது இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது. படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.