#BREAKING: துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது – ரேலா மருத்துவமனை அறிக்கை..!

#BREAKING: துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது – ரேலா மருத்துவமனை அறிக்கை..!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது  பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தலுக்கு பின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube