Thursday, November 30, 2023
HomeWeatherஅடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ளது. அந்த வகையில், இன்று சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 43% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், வங்கக் கடல் மற்றும் இலங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் வேகமெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார் .சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.