13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய

By gowtham | Published: Jun 05, 2020 02:36 PM

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,தஞ்சை,திருவாரூர, நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி கன்னியாகுமரி, ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 8ம் தேதி வங்கக்  கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc