மூன்று நதிகளை இணைக்கும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடியும்.! தமிழக முதல்வர் அறிவிப்பு.!

மூன்று நதிகளை இணைக்கும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடியும்.! தமிழக முதல்வர் அறிவிப்பு.!

  • தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய முதலவர், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் ரூ.52 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.260 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான ரூ.72 கோடி மதிப்பிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதையடுத்து தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube