விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் இரண்டாவது நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியபோது, நேற்று திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை துணை தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆகையால், விவசாயிகளின் கருத்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை துணை தலைவர்கள் கருத்துக்களை ஒன்றாக சேர்த்து அம்மா அரசிடம் நீண்ட காலமாக விவசாயிகள் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்று கூறிய முதல்வர், விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது என்றும் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்