வாக்களித்த விவசாயிகளுக்கு மோடி கொடுத்த பரிசுதான் மூன்று வேளாண் சட்டங்கள்-ஸ்டாலின் பேச்சு..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக சார்பில் இன்றுபோராட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டே இங்கு வந்தேன்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் கோடிக்கணக்கான விவசாய பெருங்குடி மக்களுக்கு தாம் சல்யூட் அடிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக் கூடாது என அ.தி.மு.க செயல்படுகிறது.

ஓரவஞ்சனையுடன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சேலம் போராட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த விவசாயிகள், திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் இதுவரை இது போன்று ஒரு போராட்டம் நடந்தது இல்லை. விவசாயிகள் போராட்டத்தின் மூலம் பா.ஜ.க அரசை அசைத்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும். அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது. இது திமுக போராட்டம் அல்ல; விவசாயிகளுக்கான போராட்டம் என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.

மோடியின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் வாக்களித்தார்கள் அதற்கு அவர் கொடுக்கும் பரிசுதான் மூன்று வேளாண் சட்டங்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டமன்றத்தை கூட்டி வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றினால் எடப்பாடி பழனிசாமி க்கு பாவமன்னிப்பு கிடைக்கும். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடர வேண்டும்.

author avatar
murugan